தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/சாதிக்க என்ன வழி

சாதிக்க என்ன வழி

சாதிக்க என்ன வழி


ADDED : மார் 08, 2012 03:03 PM

Google News

ADDED : மார் 08, 2012 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி அவரவர் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. அன்புள்ள ஒருவனின் மனதில் பக்தி தானாக கிளர்ந்தெழும்.

* கடவுளின் அருள் நாம் எதிர்பார்க்காத நேரத்திலேயே கிடைக்கும் என்பதால், அவரது அருளைப் பெற பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

* கடவுள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். அவரிடம் ஒருவன் கொள்ளும் தீவிரமான பக்தி நிலைக்கு ஏற்பவே, அவரை உணர முடியும்.

* ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனைத் தருவதால் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். பிறரிடம் கடுமையாகப் பேசுவது, பிறருடைய துன்பத்திற்கு காரணமாவது நல்லதல்ல.

* தன்னை நம்பியிருப்பவரை அனைத்து துன்பங்களில் இருந்தும் கடவுள் காப்பாற்றுகிறார்.

* பக்தி, அன்பு மூலமாக வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம்.

* பகவானின் திருநாமத்தை ஜபிப்பதால் மட்டுமே மனிதனின் உடலும் மனமும் தூய்மையை அடையும்.

-சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us